விசுவாசப் பிரமாணம்



பரலோகத்தையும் பூலோகத்தையும் 
படைத்த 
எல்லாம் வல்ல 
பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். 
அவருடைய ஏகசுதனாகிய 
நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். 

இவர் 
பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து 
கன்னி மரியாயிடமிருந்து பிறந்தார். 

போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் 
பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு 
மரித்து 
அடக்கம் செய்யப்பட்டார். 

பாதாளத்தில் இறங்கி
 மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து 
உயிர்த்தெழுந்தார். 

பரலோகத்திற்கு எழுந்தருளி 
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய 
வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். 

அவ்விடத்தில் இருந்து 
சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க 
வருவார்.

 பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். 

பரிசுத்த கத்தோலிக்க
 திருச்சபையை விசுவசிக்கிறேன். 

புனிதர்களுடைய 
சமுதீதப்பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். 

பாவப் பொறுத்தலை
 விசுவசிக்கிறேன். 

சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். 

நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். 

அமென்.

Post a Comment

Author Name

Contact Form

Name

Email *

Message *

Theme images by Flashworks. Powered by Blogger.