பத்துக்கட்டளைகள்/பத்துக்கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து.

1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே, நம்மைத்தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.

2. சர்வேசுரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.

3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.

4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.

5. கொலை செய்யாதிருப்பாயாக.

6. மோகபாவம் செய்யாதிருப்பாயக.

7. களவு செய்யாதிருப்பாயாக.

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.

10. பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.


இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்.

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.

2. தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

Post a Comment

Author Name

Contact Form

Name

Email *

Message *

Theme images by Flashworks. Powered by Blogger.